For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டீஸ்கரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு.. பாஜக-காங். நடுவே கடும் போட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் | ஹரியாணா முதல்வர் சர்ச்சை பேச்சு- வீடியோ

    ராய்ப்பூர்: பாஜக ஆட்சி நடக்கும் சட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

    சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நக்சலைட் பாதிப்பு அதிகமாக உள்ள 18 தொகுதிகளுக்குக் கடந்த 12ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    நாளை வாக்குப்பதிவு

    நாளை வாக்குப்பதிவு

    எஞ்சிய 72 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 20ம் தேதியான நாளைத் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவு டிசம்பர் 11ம் தேதி தெலுங்கானா, ம.பி., ராஜஸ்தான், மிசோராம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகளுடன் ஒன்றாக, வெளியாக உள்ளது.

    தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரம்

    இதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. மகசுமந்த் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திரி மோடி, விவசாயிகள் பிரச்சினையில் காங்கிரஸ் நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டினார்.

    குடும்ப அரசியல்

    குடும்ப அரசியல்

    குடும்ப அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாக நேரு குடும்பத்தை குற்றம்சாட்டிய மோடி, இது மன்னர் ஆட்சி போல உள்ளதாகவும், காங்கிரஸ் துணை தலைவராக இருந்த சிதாராம் கேசரி என்ற தலித் தலைவருக்குச் சோனியா காந்தி வருகையின்போது என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

    மது விலக்கு

    மது விலக்கு

    காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில், மது விற்பனைக்குத் தடை விதிப்போம் என்று அறிவித்துள்ளது. விவசாய கடன்களை ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரசுக்கு பலம்

    காங்கிரசுக்கு பலம்

    இதனிடையே சட்டீஸ்கரின் ஜனதா காங்கிரஸ் கட்சி பொருளாளர் கஜ்ராஜ் பகரியா ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது அந்தக் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    English summary
    Campaigning for the second and final phase of Chhattisgarh assembly elections ends on Sunday as voters are set to exercise their franchise on November 20 in 72 constituencies spread across 19 districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X