மத்திய அரசின் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் கிடையாது, கசப்பு மருந்துதான்- அருண் ஜெட்லி
டெல்லி: மோடி அரசின் முதல் பட்ஜெட் வரும் 10ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது கவர்ச்சிகர திட்டங்களை உள்ளடக்கியதாக இல்லாமல் கசப்பு மருந்தை உள் வைத்ததாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த இந்திய பட்டைய கணக்காளர்கள் (சார்டட் அக்கவுண்ட்) கூட்டத்தில் ஜெட்லி கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும். எதற்கும் உதவாத கவர்ச்சித் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் இடம் இருக்காது. இது போன்ற திட்டங்களால் அரசின் செலவீனங்கள் அதிகரித்து, இறுதியில் அது மக்களின் தலைகளில் சுமையாக வந்து சேரும் என ஜெட்லி கூறினார். சீர்குலைந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வகையில் உறுதியான, கடினமான முடிவுகளுடன் கூடியதாக பட்ஜெட் இருக்கும். விலைவாசி நிலவரம் பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவையும் மிஞ்சி விட்டது. இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.
பல திட்டங்களுக்கும் அளிக்கப்படும் மானியங்கள், சலுகைகள் இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி தயவு இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பாஜக பிடித்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக, கூட்டணி ஆட்சி நடந்து வந்ததால், மானிய குறைப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்க அரசுகள் தயங்கின. எனவே, உறுதியான அறிவிப்புகளை இப்போதுதான் செயல்படுத்த முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications