ஜன-15ல் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் பட்டியல் 'ரிலீஸ்'! தேவ கவுடாவின் 2 மருமகள்களும் போட்டி!!!
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் 2 மருமகள்களுமே லோக்சபா தேர்தலில் குதிக்க இருக்கின்றனர்.
பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் நேற்று முதல் தேர்தல் ஆலோசனையை தொடங்கியுள்ளனர். எந்தெந்தெ தொகுதிகளில் வெற்றி உறுதியானது என்பதை ஆய்வு செய்து வேட்பாளர்களை நிறுத்த மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. அனேகமாக கர்நாடகாவில் 18 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது தற்போது எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் லோக்சபா தேர்தலில் தேவ கவுடா மகன் குமாரசாமியும் கூட போட்டியிட மாட்டார் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

மகாராஜா மனைவி போட்டி?
அதே நேரத்தில் மறைந்த மைசூர் மகாராஜா உடையாரின் மனைவியை மைசூர் தொகுதியில் நிறுத்தும் முயற்சிகளை மதச்சார்பற்ற ஜனதா தளம் மேற்கொண்டு வருகிறது.

மருமகள்கள் போட்டி
மேலும் தேவகவுடாவின் 2 மருமகள்களான அனிதா குமாரசாமி, பவானி ரேவண்ணா ஆகியோரையும் லோக்சபா தேர்தலில் களமிறக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தீர்மானித்துள்ளது,

தோல்வி மேல் தோல்வி
சென்னபட்னா, பெங்களூர் ரூரல் தொகுதிகளில் அனிதா தோல்வி மேல் தோல்வியைத் தழுவியதால் அவருக்கு வேறு தொகுதி தேடப்பட்டு வருகிறது.

மாண்டியாவில் பவானி
மருமகள் பவானி ரேவண்ணாவை ஒக்கலிகா கவுடாக்கள் அதிகம் வாழும் மாண்டியா தொகுதியில் நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

ஹாசனில் கவுடா
வழக்கம்போல ஹாசன் தொகுதியிலேயே தேவகவுடா போட்டியிடவும் முடிவு செய்துள்ளாராம்.

பங்காரப்பா குடும்பத்துக்கு வாய்ப்பு
சிமோஹாவில் பங்காராப்பா குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தரை நிறுத்தவும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.

17 மாநில கட்சிகள் மாநாடு
அத்துடன் பாஜக- காங்கிரஸ் அல்லாத 17 மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து பெங்களூரில் பிரம்மாண்ட மாநாட்டை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடத்தவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications