"வெளியே சொன்னால் கொன்னுடுவேன்".. 14 வயது சிறுமியை அழைத்து சென்று காங்., எம்எல்ஏ செய்த செயல்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: படிக்க வைப்பதாக அழைத்து சென்று 14 வயது சிறுமியை தனது அலுவலகத்தில் பணி செய்ய வைத்ததோடு, பாலியல் பாலாத்காரம் செய்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ பூஷண் பாரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

fir-filed-against-jharkhand-congress-mla-after-14-year-girl-rape-allegations

ஜார்கண்ட்டின் சிம்தேகா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூஷண் பாரா. இவர் மீது தற்போது 14 வயது சிறுமி ஒருவர் பரபரப்பான பாலியல் புகாரை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி துர்வா போலீசில் அளித்துள்ள புகார் திடுக்கிட வைத்துள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

''நான் காங்கிரஸ் எம்எல்ஏ பூஷண் பாரா வென்ற சிம்தேகா சட்டசபை தொகுதியை சேர்ந்தவள். எனது குடும்பம் மிகவும் ஏழை. என்னால் படிக்க முடியவில்லை. இதனால் என்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாக கூறி எம்எல்ஏவின் குடும்பத்தினர் சிம்தேகாவில் இருந்து ராஞ்சிக்கு அழைத்து வந்தனர். ஆனால் என்னை பள்ளியில் சேர்க்கவில்லை.

ராஞ்சியில் உள்ள எம்எல்ஏவின் அலுவலக இல்லத்தில் வேலை பார்க்க வைத்தனர். கடந்த 5ம் தேதி ராஞ்சி இல்லத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் யெ்தார். இதனால் கர்ப்பம் அடைந்தார். ஆனால் கர்ப்பம் கலைந்துவிட்டது. கர்ப்பம் கலைந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் எனக்கு நேர்ந்த கொடுமை, பாலியல் பலாத்காரம் பற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும், மீறி சொன்னால் கொலை செய்வதாகவும் எம்எல்ஏ பூஷண் பாரா மிரட்டல் விடுத்தார்'' என கூறியிருந்தார்.

இருப்பினும் இந்த புகாரை எம்எல்ஏ பூஷண் பாரா முற்றிலுமாக மறுத்தார். ''எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை'' என கூறினார். ஆனாலும் 14 வயது சிறுமியின் இந்த புகார் ஜார்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது எம்எல்ஏ பூஷண் பாரா மீது போக்சோ மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் துர்வா போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ஹடியா டிஎஸ்பி நீரஜ் குமார் உறுதி செய்தார்.

தற்போது வரை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக போர்க்கொடி உயர்த்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியோ போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணை முடியும் வரை அரசியல் செய்யாமல் பாஜக அமைதி காக்க வேண்டும் என்று கூறி வருகிறது. இதனால் இந்த விவகாரம் ஜார்கண்ட் அரசியலில் தற்போது பரபரப்பாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+