For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகமதாபாத் இஸ்ரோ அலுவலகத்தில் தீவிபத்து.. உடனடியாக அணைக்கப்பட்டது!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இஸ்ரோ அலுவலக உள் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டரின் ஸ்டோர் ரூமில் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது.

Fire accident in Ahmedabad ISRO office

சம்பவம் குறித்து அறிந்தவுடன் 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்தனர். ஒரு மணிநேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தினால் உயிரிழப்போ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த தீ விபத்து குறித்து பேசிய தீயணைப்புத்துறை அதிகாரி டஸ்டர், ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டரில் உள்ள ஸ்டோர் ரூமில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 5 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றார். மேலும், ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது என்றும், சில புத்தகங்கள் மட்டும் தீயில் எரிந்து விட்டன என்றும் கூறினார்.

இதே அகமதாபாத் இஸ்ரோ அலுவலகத்தில் கடந்த மே மாதம் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Fire inside the ISRO has been extinguished by the fire department. The incident of fire took place in the store room of ISRO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X