முன்னாள் காங். எம்.பி. ராஜய்யா வீட்டில் தீ: மருமகள், 3 பேரன்கள் உடல் கருகி பலி
வாரங்கால்: தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யாவின் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அவரின் மருமகள் மற்றும் 3 பேரன்கள் உடல் கருகி பலியாகினர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்காலில் வசித்து வருபவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா. அவரின் வீட்டில் இன்று அதிகாலை வேளையில் திடீர் என பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அவரது மருமகள் சரிகா மற்றும் பேரன்கள் அபினவ், அயன் மற்றும் ஸ்ரீயன் ஆகியோர் உடல் கருகி பலியாகினர். சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சரிகா ராஜய்யாவின் மகனை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்ததுடன் தனது மாமனார் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரங்கால் லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட ராஜய்யா கடந்த 31ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த தொகுதியின் காதிம் ஸ்ரீஹரி(தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி) தெலுங்கானா துணை முதல்வர் ஆக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வாரங்கால் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications