கெயில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி: கேஸ் லீக்.. அடுப்பு பற்ற வைத்தபோது விபரீதம்
குண்டூர்: ஆந்திராவில் கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்ததில் 15 பேர் பலியாகினர். எரிவாயு கசிந்திருந்தபோது டீக்கடைக்காரர் ஒருவர் அடுப்பை பற்ற வைத்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் நாகாரத்தில் உள்ள கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்ததில் தொழிலாளர்கள் 15 பேர் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தை அடுத்து எட்டு தீ அணைப்பு வண்டிகளில் வந்த தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை அடுத்து நாகாரம் பகுதி முழுவதும் உள்ள எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
{ventuno}
அதிகாலை 4.30 மணி அளவில் எரிவாயு கசிந்து நாகாரம் பகுதி முழுவதும் பரவி இருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் காலையில் அடுப்பு பற்ற வைத்தபோது தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பலியானவர்களில் 12 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications