முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷீத் வீட்டில் தீ விபத்து.. டெல்லியில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷீத் வீட்டில் தீடீரெனெ தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீக்ஷீத். டெல்லியின் முன்னாள் முதல்வரான இவரது வீடு நிஜாமுதீனில் உள்ளது. அங்குதான் அவர் வசித்து வருகிறார்.

Fire at Sheila Dixit residence

இந்நிலையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்த தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Fire Accident in Tirupati-Oneindia Tamil

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிபத்தில் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire at residence of Former CM Sheila Dixit in East Nizamuddin in Delhi.
Please Wait while comments are loading...