For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண மண்டபத்தில் தீவிபத்து.. ஓட்டம் பிடித்த மக்கள்.. பந்தியை விட்டு எழாத நபர்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் ஒரு திருமண மண்டபமே தீப்பிடித்து மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடி கொண்டிருந்த போது அங்கு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் சிறிதும் பீதியின்றி உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    திருமண மண்டபத்தில் தீவிபத்து.. ஓட்டம் பிடித்த மக்கள்.. பந்தியை விட்டு எழாத நபர்.. வைரல் வீடியோ

    திருமணம் என்றாலே அங்கு அந்த வீட்டாரை தாண்டி மற்றவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களுடன் அரட்டை, சொந்த கதை சோக கதை பேசுதல் என்பதையும் தாண்டி விருந்து என்பது முக்கிய இடத்தை பிடிக்கிறது.

    அவரவர் வசதிகேற்ப விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை மாறுபடும். பொதுவாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வருவோர் உணவு மீது குறை சொல்லக் கூடாது என்பதில் நிகழ்ச்சி நடத்துவோர் கவனமாக இருப்பார்கள்.

     5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : திருத்தப்பட்ட மாற்றம் ஏன்? 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : திருத்தப்பட்ட மாற்றம் ஏன்?

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    இதற்காக பார்த்து பார்த்து கேட்டரிங்கை தேர்வு செய்வார்கள். பொதுவாக பந்திக்கு முந்து என்பார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் டைனிங் ஹாலுக்கு வந்து உணவை உண்டுவிட்டுதான் மற்ற வேலை பார்க்க வேண்டும். பந்தி எண்ணிக்கை ஏற ஏற உணவு வகைகளின் அளவும் எண்ணிக்கையும் குறையும் என்பார்கள்.

    பிவாண்டி

    பிவாண்டி

    அப்படியிருக்கையில் மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டியில் ஒரு திருமண விழா நடைபெற்றது. அப்போத திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த நேரம் பார்த்து பந்தி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சிலரும் கையை துடைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    ரசித்து ருசித்து

    ரசித்து ருசித்து

    ஆனால் அங்கு இருவர் மட்டும் எதுவுமே நடக்காதது போல் ரசித்து ருசித்து உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தியும் அவர்கள் பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் வந்தன.

    நாற்காலிகள்

    நாற்காலிகள்

    6 இரு சக்கர வாகனங்களும் சில நாற்காலிகளும் அலங்கார பொருட்களும் தீயில் கருகின. இதுகுறித்து முதல் கட்ட விசாரணையில் பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Fire brings down in Wedding, 2 men were seen eating food without bothering about fire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X