10 மணி நேர துப்பாக்கிச் சண்டை! ஆந்திராவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது!
புத்தூர்: ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் 10 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் உயிரோடு பிடிபட்டனர்.
மதுரை அருகே திருமங்கலத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு வைத்தது, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, பெங்களூர் பாஜக அலுவலக குண்டு வெடிப்பு ஆகியவற்றில் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் உள்ளிட்டோர் தேடப்பட்டு வந்தனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது.

போலீஸ் பக்ருதீன் கைது
இவர்களில் போலீஸ் பக்ருதீன் நேற்று கைது செய்யப்பட்டான்.

புத்தூரில் தீவிரவாதிகள் பதுங்கல்
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிலால் மாலிக் உட்பட தீவிரவாதிகள் சென்னை அருகே ஆந்திர மாநிலம் புத்தூரில் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது.

அதிகாலை 4 மணிக்கு தாக்குதல்
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு பிலால் மாலிக் உட்பட தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை தமிழக போலீசார் சுற்றிவளைத்தனர்.

ஆக்டோபஸ் படை
தமிழக போலீசாருடன் மத்திய பாதுகாப்புப் படையின் ஆக்டோபஸ் பிரிவும் இணைந்து கொண்டது. போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்த பிலால் மாலிக்கும் தீவிரவாதிகளும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

3 தெருக்கள் வெறிச்
இதனால் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் 3 தெருக்களில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

10 மணி நேர சண்டை
இதைத் தொடர்ந்து தமிழக போலீசாரும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பு துப்பாக்கிச் சண்டை 10 மணி நேரம் நீடித்தது.

போலீசார் காயம்
இம்மோதலில் தமிழக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளார். லட்சுமணனை தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டியும் உள்ளனர். அவர் தற்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10 பேர் மீட்பு
இந்நிலையில் பிலால் மாலிக் வீட்டில் இருந்த ஒரு பெண் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்கள் அனைவரும் ரகசியமான ஒரு இடத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருவர் கைது
10 மணி நேரம் நீடித்த மோதலின் முடிவில் பிலால், மன்னா இஸ்மாயில் இருவரும் போலீசிடம் உயிருடன் சிக்கினர்.

பொதுமக்கள் ஆத்திரம்
காயமடைந்த மன்னா இஸ்மாயிலை போலீசார் ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்ற போது பொதுமக்கள் அவனை ஆத்திரத்தில் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை முதல் நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்ததால் புத்தூர் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications