கவுடா மகன் விவகாரம்: பலாத்காரம் செய்தவர் நலமாக வாழ பூஜை செய்த நடிகை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பலாத்கார புகார் அளித்த கார்த்திக் கவுடா பெயரில் நடிகை மைத்ரி சிறப்பு பூஜை செய்து அவருக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

First filing rape complaint next performs pooja
  • மத்திய ரயில்வே அமைச்சர் மகன் சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்துகொண்டதாகவும், நடிகை மைத்ரேயா பெங்களூர் ஆர்டிநகர் காவல் நிலையத்தில் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார்.
  • இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்த்திக் பெயரில் இன்று பெங்களூர் ஆர்டிநகரிலுள்ள சாய்பாபா கோயிலில் மைத்ரேயா சிறப்பு பூஜை நடத்தினார். கார்த்திக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
  • என்ன இருந்தாலும் அவர் தாலி கட்டிய கணவர் என்பதால் பூஜை செய்ததாக மைத்ரேயா தெரிவித்தார். புகாரும் கொடுத்துவிட்டு பூஜையும் செய்த மைத்ரேயா பெண்களின் அனுதாபத்தை பெற்றுள்ளார்.
  • இதனிடையே, இந்த புகார் ஒரு சதி என்று ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்தார். ஒருவேளை தவறு செய்திருந்தால் சட்டப்படி எனது மகன்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் உள்ளது. நான் தலையிட மாட்டேன் என்றார்.
  • கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், மைத்ரேயா எனறால் யார் என்று எனக்கு தெரியாது. சட்டம் தனது கடமையை செய்யும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+