வந்தாச்சு ஜிஎஸ்டி.. ஷாப்பிங் மால் பில் இனி இப்படித்தான் இருக்கும்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாடு முழுவதிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று அதிகாலை 12.1 மணி முதல் அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்து வைத்தனர்.
இதையொட்டி வணிக நிறுவனங்களில் பில் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மால்களில் பொருட்கள் வாங்கினால் பொருட்களின் விலைகளை போட்டுவிட்டு கீழே வரி என்று ஒரு தொகையை சேர்த்திருப்பார்கள்.

இப்போது, சில பொருட்களுக்கு வரி இருக்காது, அதேபோல ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு வரி விகிதம் உள்ளது. எனவே ஒவ்வொரு பொருளின் கீழும் ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டு வரி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிக்பஜார் நிறுவன தலைமை அதிகாரி கிஷோர் பியானி பில் ஒன்றின் மாடலை டிவிட் செய்துள்ளார், பாருங்கள்.












Click it and Unblock the Notifications