சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்!
Recommended Video

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 40 வயதான மாதவி என்பவர் நுழைந்து புதிய வரலாறு படைத்தார். பல நூற்றாண்டுகள் கழித்து மாதவிலக்கு வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.

பூஜை
இதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை
பெண்களுக்கு பாதுகாப்பு வசதி செய்வதற்காக அவர்கள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. எனினும் உச்சநீதிமன்றம் எந்த கால நிர்ணயத்தையும் விதிக்கவில்லை என்பதால் இன்று பெண்கள் சபரிமலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.

தடுத்து நிறுத்தம்
அதன்படி இன்று சபரிமலை செல்வதற்காக பத்தனம்திட்டாவில் பேருந்துக்காக பெண்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதவி. 40 வயதான இவர் சபரிமலைக்கு சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

முதல் பெண்
இதையடுத்து சன்னிதானத்துக்கு செல்ல முடியாமல் தவித்த மாதவியை போலீஸார் மீட்டு பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து சென்றனர். இதனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு முதல் முறையாக 40 வயது பெண் சபரிமலை சென்ற புதிய வரலாற்றை படைத்தார். பெண் டாக்டர்களையும் போராட்டக்காரர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வயது குறித்து அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக வந்த டாக்டர்கள் இவர்கள். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications