நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 9ம் தேதி வரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிந்ததை அடுத்து இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் 9ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் தொடக்க உரையோடு தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையின் போது, மயங்கி விழுந்து மரணம் அடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் இ. அகமது மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இன்றோடு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்ததையடுத்து, இரு அவைகளையும் அடுத்த மாதம் மார்ச் 9ம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 9ம் தேதி இரண்டாம் கட்டமாக தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் ஏப்ரல் 13ம் தேதி முடிவடையும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications