For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனுக்கு "மூக்குத்தி" போட்டு கொடுமைப்படுத்திய கிராதகர்கள்!

பெங்களூரில் மீனுக்கு இரும்பு வளையத்தை மூக்குத்தி போலபோட்டு விற்பனை செய்த நபரை போலீஸார் பிடித்து மீன்களை மீட்டனர்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஒரு அலங்கார மீன் கடையில் மீனுக்கு இரும்பு வளையம் போட்டு மீனைக் கொடுமைப்படுத்தியதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அந்த மீன்களை விலங்கியல் ஆர்வலர்கள மீட்டுள்ளனர்.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்ஆர் அக்வா பெட்ஸ் என்ற மீ்ன் விற்பனையகம் உள்ளது. அங்கு கலர் கலராக பல விதமான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தக் கடைக்கு ஒரு ஆசிரியை மீ்ன் வாங்கப் போயுள்ளார். அப்போது ஒரு மீன் தொட்டியில் இரும்பு வளையம் மாட்டப்பட்ட மீன்களைப பார்த்து அதிரச்சி அடைந்தார்.

Fish with nose rings rescued in Bengaluru

இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது இது மூக்குத்தி போல, வித்தியாசமாக இருப்பதற்காக மாட்டி விட்டுள்ளோம் என்று கடைக்காரர் பதில் கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை உடனடியாக விலங்குகளுக்காக மனிதர்கள் என்ற விலங்கியல் ஆர்வலர் அமைப்பிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அந்த அமைப்பினர் போலீஸாரின் உதவியுடன் அந்த மீன்களை மீட்டுள்ளனர். மீன்களில் பொருத்தப்பட்டிருந்த வளையங்களும் அகற்றப்பட்டு விட்டன. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான சரத்லால் என்பவர் கூறுகையில், வழக்கமாக காயமடைந்த நாய், பறவை குறித்துத்தான் எங்களுக்குத் தகவல் வரும். ஆனால் இது வித்தியாசமான புகாராக இருந்தது.

கடைக்குச் சென்று பார்த்தபோது அந்த மீன்களின் மூக்கில் வளையங்களை மாட்டியிருந்தனர். இதையடுத்து ராஜராஜேஸ்வரி நகர் போலீஸில் புகார் கொடுத்தோம். போலீஸார் உதவியுடன் அந்த மீன்களை மீட்டோம். கடும் எச்சரிக்கையுடன் கடை உரிமையாளர் பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது வளையங்கள் அகற்றப்பட்ட மீன்கள் நலமாக உள்ளன என்றார்.

மூக்குத்தி போடப்பட்ட மீன்களை ஜோடி ரூ. 550 முதல் 750 வரை விற்றுள்ளார் அந்தக் கடைக்காரர்.

English summary
In Bengaluru police and activists from PFA rescuded fishes with nose rings. The owner of the pet shop was warned and let off after inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X