திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குளத்தில் சாக்குமூட்டை நிறைய வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குளத்தில் இருந்து 5 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ளது புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில். இக்கோயிலில் பல ஆயிரம் கோடி ரூபாய் பொக்கிஷங்கள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், கோயிலில் எப்போதுமே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவிலுள்ள குளத்தில், இன்று மாலை பராமரிப்பு ஊழியர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்தின் உள்ளே சந்தேகப்படும்படியான ஒரு சாக்கு மூட்டை இருந்ததை ஊழியர்கள் கவனித்தனர்.
அதை திறந்து பார்த்தபோது, உள்ளே ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அந்த சாக்குமூட்டை, ஆளில்லா இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
அப்போது ஒரு குண்டில் இருந்து லேசான புகை வெளியேவந்ததாகவும், சிறு சத்தத்துடன் அது வெடித்ததாகவும், நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயர்மட்ட விசாரணைக்கு, மாநில போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கோயில் அருகேயுள்ள சிசிடிவிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன.
இதனிடையே, பாம்கள் கண்டெடுக்கப்பட்ட குளத்திற்குள்ளே, பொக்கிஷ அறைக்கு செல்வதற்கான ரகசிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உலவுகிறது.
பொக்கிஷங்களை கொள்ளையிடும் முயற்சியாக, சமூக விரோதிகள், யாரேனும் வெடிகுண்டுடன் கோயில் அருகே வந்திருக்கலாம், பாதுகாப்பு கெடுபிடி காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் தடங்கலாலோ, வெடிகுண்டுகளை குளத்தில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலை சுற்றிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications