ரிலையன்ஸ் ஜியோ.. அவசியம் தெரிய வேண்டிய 5 தகவல்கள்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவித்தார்.
டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி கூறியதில் முக்கியமான 5 பாயிண்டுகளை இங்கே பாருங்கள்:
- ஜியோவில் டிசம்பர் 31ம் தேதிவரை அனைத்து உள்ளூர், உள்நாட்டு அழைப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம்.
- வெல்கம் ஆஃபர் மூலமாக வரும் டிசம்பர் 31ம் தேதிவரை ஹெச்டி வீடியோ அழைப்புயும் இலவசமாக வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்தியாவில் 90 சதவீதம் பேர் ரியோ வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்கிறார் முகேஷ் அம்பானி.
- ரூ. 1500 மதிப்புள்ள ஜியோ ஆப்புகள் அத்தனையையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- பிற செல்போன் சேவை நிறுவனங்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை 250 ரூபாய் என்ற அளவில் தரும் நிலையில், உலகிலேயே குறைந்த கட்டணமாக, 1 ஜி.பி. டேட்டாவை ஜியோ 50 ரூபாய்க்கு தர உள்ளது.
- நாட்டில் எங்கு சென்றாலும் ரோமிங் கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பின் மூலம், பிற செல்போன் நிறுவனங்களும், ரோமிங் கட்டணத்தை கட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் சிம்கார்டு கிடைக்கும்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications