பெரியாற்றில் நீந்தப் போகும் ஐந்து வயது சிறுமி!
கேரள மாநிலத்தில் உள்ள பெரியாற்றில் 5 வயது சிறுமி ஒருவர் நீந்தி சாதனை படைக்கவுள்ளார். இந்த சாதனையை அந்த சிறுமி நாளை நிகழ்த்தவுள்ளார்.
கொச்சி: கேரளாவைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரின் 5 வயது மகள் பெரியாற்றில் நீந்தி சாதனை படைக்க உள்ளார். இதற்காக கடந்த 12 நாட்களாக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் பாயும் பெரியாறு 20 முதல் 25 அடி ஆழம் கொண்டது. இங்கு அண்மைக் காலமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சுசீந்திரனின் 5 வயது மகள் நிவேதிதா, அலுவா அத்வைதா ஆஸ்ரமத்திலிருந்து அலுவா மனப்புரம் வரை பெரியாற்றில் நீந்த உள்ளார்.

நிவேதிதா நாளை இந்த சாதனையை படைக்கவுள்ளார். நீச்சல் தெரிந்தவர்களுக்கு தண்ணீரைக் கண்டு அச்சம் அடைய தேவையில்லை என தெரிவிக்கும் வகையில் சிறுமி இந்த சாதனையை படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எந்த இடைவெளியும் இன்றி ஒரே மூச்சில் சிறுமி ஆற்றைக் கடக்கவுள்ளதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த 12 நாட்களாக நிவேதிதா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் 20 முதல் 25 நிமிடங்களில் ஆற்றைக் கடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications