ரோஜா பயணித்த விமானத்தில் கோளாறு... மீண்டும் ஹைதராபாத்தில் தரையிறங்கியது
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்குக் கிளம்பிய விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் ஹைதராபாத்திலேயே தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர் ஆவார். விமானம் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே என்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானி முன்னெச்சரிக்கையாக விமானத்தை ஹைதராபாத்துக்குத் திருப்பினார்.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விமானம் ஹைதராபாத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, தரையிறக்கப்பட்ட பின்னர்தான் பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாம்.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications