கனமழையால் காஷ்மீரில் கரைபுரளும் வெள்ளம் – 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் ஸ்ரீநகர் உட்பட ஏழு மாவட்டங்களி்ல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக பள்ளி களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜீலம் நதியில் வெள்ள அபாய அளவை காட்டிலும் அதி்களவில் தண்ணீர் செல்கிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள சங்கம் ஆற்றிலும் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர்மழையை அடுத்து மாநில அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து முதல்வர்ž ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மாநில மக்கள் வெள்ள அபாயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை . தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஜீலம் நதி பாயும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இரண்டு அமைச்சரவை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications