கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்!
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த கோவில் திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த வறட்டி என்னும் உலர் சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தாக்கம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தில் சென்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2,00,000-ஐ கடந்து விட்டது. பல்வேறு மாநிலங்கள் கொரோனவை விரட்டியடிக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது ஒருபுறமிருக்க கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

மக்கள் மதிப்பதில்லை
என்னதான் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் கொரோனவை முழுமையாக ஒழிக்க முடியாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மதிப்பதில்லை என்பதே உண்மை.

தடுப்பு விதிகளை மறந்தனர்
ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவில் மாஸ்க் மறந்து, சமூக இடைவெளியை துறந்து பக்தர்கள் ஒன்றுகூடிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானது. இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் மட்டும் கடந்த 4 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
சாணி அடிக்கும் திருவிழா
அதாவது அஸ்பரி மண்டலம் கைரூப்பாலா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்புக்கு மறுநாள் நடக்கும் இந்த திருவிழாவில் வறட்டி எனப்படும் உலர் சாணியை ஒருவரை ஒருவர் வீசி அடித்துக் கொள்வது வழக்கம். இதேபோல் நேற்று நடந்த திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஆனால் அப்போது யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளி என்பது சுத்தமாக இல்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications