(வசுந்தர) ராஜே தர்மா அல்ல ராஜ்ய தர்மாவை பின்பற்றுங்கள்: மோடிக்கு காங்கிரஸ் அறிவுரை
டெல்லி: பிரதமர் மோடி ராஜ்ய தர்மாவுக்கு பதிலாக ராஜே தர்மாவை பின்பற்றுகிறார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை பெரிய மோடி என்றும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை சின்ன மோடி என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்நிலையில் லலித் மோடி விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார் கூறுகையில்,

பிரதமர் ராஜ்ய தர்மாவை பின்பற்ற வேண்டும். ராஜே தர்மாவையோ, லலித் தர்மாவையோ பின்பற்றக் கூடாது. லலித் மோடிக்கு உதவி செய்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பாஜக பதவி நீக்கம் செய்யாமல் உள்ளது.
லோக்சபா தேர்தலின்போது வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவரின் இந்த செயல் அதிருப்தி அளிப்பதாக உள்ளது.
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு மோடி பாதுகாப்பாக உள்ளார். லலித் மோடிக்கு உதவியதன் மூலம் ராஜே தேசத்திற்கு எதிரான செயலை செய்துள்ளார் என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications