வெளிநாட்டு சதி தான் காரணம்.. லோக்சபா தேர்தலில் பாஜக தோற்றது எப்படி? பரபரப்பை கிளப்பிய சிவ்ராஜ்சிங்
ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்காமல் போனதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நம் நாட்டில் ஏப்ரல் 20 முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தனிமெஜாரிட்டிக்கு ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. பாஜக அதிகபட்சமாக 240 இடங்களில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 53 இடங்களில் ஜெயித்தது. இதையடுத்து கூட்டணி கட்சி ஆதரவுடன் பாஜக மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்த தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக 370 இடங்களிலும், கூட்டணி கட்சிகளை சேர்த்தால் 400க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது. ஆனால் பாஜகவால் இந்த இலக்கை எட்டட முடியவில்லை. குறிப்பாக தனி மெஜாரிட்டியை கூட பாஜகவால் பெற முடியவில்லை. இந்நிலையில் தான் தற்போது பாஜக சார்பில் மாநிலம் வாரியாக தேர்தல் தோல்விக்கான காரணம் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் அந்த கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் இந்த மாநிலத்தில் உள்ள நிலையில் 14 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. 11 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், முதல்வர் பஜன்லால் சர்மா, முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளர் விஜய் சஹாஸ்ரபுத்தி பங்கேற்றனர்.
இதுதவிர முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட 8000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தான் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த வேளையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசும்போது கூறியதாவது:
‛‛லோக்சபா தேர்தலில் பாஜகவின் இடங்கள் குறைந்ததன் பின்னணியில் வெளிநாடுகளின் சதி உள்ளதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தேர்தலில் பாஜக வெல்லக்கூடாது என்று விரும்பினர்'' என்றார். சிவ்ராஜ் சிங் சவுகானின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. அதோடு உண்மையில் நம் நாட்டின் லோக்சபா தேர்தலில் வெளிநாடுகளின் சதித்திட்டம் இருந்ததா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications