For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ரிலீசுக்கு தேவையான நடைமுறைகள் மாலைக்குள் முடியும்: சிறைத்துறை டிஐஜி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: இன்று மாலைக்குள்ளாகவே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சிறையில் இருந்து வெளியேவிட தேவையான நடவடிக்கைகளை எடுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறை டிஐஜி ஜெயசிம்ஹா.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அதை சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு, அவர் அனுமதியின்பேரில் சிறை நிர்வாகம் நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இதற்கு நாளை வரை கால அவகாசம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Formalities for Jayalalithaa’s release to be over by evening: prison official

இந்நிலையில் சிறைத்துறை டிஐஜி ஜெயசிம்ஹா நிருபர்களிடம் கூறுகையில், ரிலீசுக்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் இன்று மாலைக்குள் முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அதிமுக தொண்டர்கள் குவிவது தடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறையை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English summary
Formalities for the release of AIADMK general secretary Jayalalithaa, who has been granted bail by the Supreme Court in the disproportionate assets case, from the prison here, would be completed by this evening, a top jail official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X