For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றிலும் போதை ஊசிகள்.. சடலமாக கிடந்த பெண் டாக்டர் சோனம்.. கணவர் கொடுமை காரணமா?

பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுற்றிலும் போதை ஊசிகள்.. சடலமாக கிடந்த பெண் டாக்டர்

    டெல்லி: பூட்டிய கதவை திறந்து கொண்டு உள்ளே போனால், போதை ஊசிகள் சிதறி கிடக்க.. சடலமாக விழுந்து கிடந்துள்ளார் டெல்லி போர்ட்டிஸ் ஆஸ்பத்திரியின் பெண் டாக்டர் சோனம்!

    டெல்லி போர்ட்டிஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்த பெண் சோனம் மோடிஸ்.. 29 வயதாகிறது.. இவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை சுற்றிலும் போதை ஊசிகள் சிதறிகிடந்தன.

    இதனால் போலீசார் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பினர். அப்போது, அளவுக்கு அதிகமமாக மயக்க மருந்து சாப்பிட்டுள்ளதால், சோனம் இறந்துவிட்டதாக ரிப்போர்ட் வந்துமே போலீசார் அதிர்ந்துவிட்டனர்.

    சோனம்

    சோனம்

    ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சோனம், 2017-ல் போர்ட்டிஸ் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்த ஷிகர் மோர் என்பவரை காதலித்துள்ளார்.. மகள் ஆசைப்படவும், வீட்டில் மறுப்பு சொல்லாமல், 2018 மே மாசம் கல்யாணம் வைத்துள்ளனர் பெற்றோர்.

    அடித்து கொடுமை

    அடித்து கொடுமை

    ஆனால், ஒரு சில மாதங்கள்தான் ஆகியிருக்கும்.. வரதட்சணை கேட்டு தங்கள் மகளை அடித்து கொடுமைப்படுத்தியதாக ஷிகர் மீது புகார் சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லை, ஷிகர், போதைப் பொருள்களுக்கு அடிமையானராம்.. அதனால் தங்கள் மகளையும் கட்டாயப்படுத்தி போதை பொருள்களை தந்து வந்துள்ளார்.. இதனால் தங்கள் மகள் உடல்நிலை மோசமாகி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை வரை வந்தபிறகுதான், தங்களுக்கு எல்லா உண்மையும் தெரியவந்ததாக சோனம் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

    ஹரியானா

    ஹரியானா

    "கணவன் டார்ச்சர் செய்ததால், ஷிகரின் பெற்றோர், சோனமை அவர்களது கல்கத்தா வீட்டுககு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால் அவர்களும் சோனத்தை அடித்து கொடுமைப்படுத்தினார்கள்.. இதனால் அவள் தனியாக ஹரியானாவில் ஒரு வீடு எடுத்து தங்கினாள்.. அங்கும் கணவரும், அவர் குடும்பத்தாரும் அவளை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    கொலைதான்

    கொலைதான்

    போன ஞாயிற்றுக்கிழமைதான் அவளுடன் நாங்கள் கடைசியாக பேசியது.. நாங்கள் போன் போட்டும் எடுக்கவில்லை.. அவர்கள் செய்த டார்ச்சரால் எங்கள் மகள் தற்கொலை செய்திருக்க வேண்டும்.. இல்லையென்றால், அவர்களே அடித்து கொன்றிருக்கலாம்" என்று கதறுகிறார்கள் பெற்றோர்.

    விசாரணை

    விசாரணை

    சோனத்தின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஷிகர், அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனம் பயன்படுத்திய ஊசி போன்றவை கைப்பற்றப்பட்டு, தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தால்தான் சோனம் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

    English summary
    former aiims female doctor found dead in her flat near gurugram and investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X