புது வாழ்க்கை.. குட்டிப் பாப்பா.. புது கார்.. கலக்கும் ஸ்ரீசாந்த்
டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி ஆயுள்கால தடை விதிக்கப்பட்டு கிரிக்கெட்டிலிருந்து விலகி புது வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது பெண் குழந்தையின் படத்தையும், தான் வாங்கியுள்ள புதிய ஜாகுவார் கார் படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியில் வேகப் பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து ஆடி வந்தார்.
2013 ஐபிஎல் தொடரின்போது இவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்டார் ஸ்ரீசாந்த். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆயுள் கால தடை
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ ஆயுள் காலத் தடை விதித்தது. இதனால் கிரிக்கெட் உலகிலிருந்து விடுபட்டார் ஸ்ரீசாந்த்.

ராஜகுமாரியுடன் திருமணம்
இதைத் தொடர்ந்து ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரியை மணந்து கொண்டார். புவனேஸ்வரிதான் ஸ்ரீசாந்த்தின் வழக்குக்கு உறுதுணையாக இருந்து உதவியவர் ஆவார்.
— Sreesanth (@sreesanth36) July 14, 2015 |
அழகான பெண் குழந்தை
2013ம் ஆண்டு புவனேஸ்வரியை மணந்தார் ஸ்ரீசாந்த். அவருக்கு 3 மாதத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தையுடன், அமைதியான அழகான குடும்பம் நடத்தி வருகிறார் ஸ்ரீசாந்த்.
|
டிவிட்டரில் மகள் படம்
இந்த நிலையில் தனது மகள் படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீசாந்த். மகளை செல்லமாக அணைத்தபடி அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார் ஸ்ரீசாந்த்.
— Sreesanth (@sreesanth36) July 14, 2015 |
புதுக் கார்
மேலும் அவர் சமீபத்தில் புதிதாக ஜாகுவார் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அந்தக் காரில் தனது மனைவியுடன் ஜாலியாக போய் வந்ததையும் டிவிட்டரில் போட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications