For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவில் இணைந்தார் 'ரா' முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் நாட்டின் முதன்மை உளவு அமைப்பான 'ரா'வின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி இணைந்துள்ளார்.

டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் சஞ்சீவ் திரிபாதி, அக்கட்சியில் இணைந்தார். சஞ்சீவ் திரிபாதியின் மாமனார் பாஜ்பாயும் ரா அமைப்பின் தலைவராக இருந்தவர்.

Former RAW chief Sanjeev Tripathi joins BJP

வரும் லோக்சபா தேர்தலில் சஞ்சீவ் திரிபாதி போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. தாம் அரசியலில் குதித்தது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சீவ் திரிபாதி, பாரதிய ஜனதாவினால் மட்டுமே நிலையான அரசை தர முடியும். நாட்டின் பாதுகாப்பை பாஜகவினால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதனாலேயே பாஜகவில் இணைந்தேன் என்றார்.

அண்மையில் முன்னாள் உள்துறை செயலர் ஆர்.கே.சிங், முன்னாள் பெட்ரோலியத் துறை செயலர் பாண்டே, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்திப்சிங் பூரி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Research and Analysis Wing (RAW) chief Sanjeev Tripathi today joined the Bhartiya Janata Party (BJP) ahead of the Lok Sabha elections, following the footsteps of several retired bureaucrats and diplomats finding a career in politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X