தடுப்பு சுவரில் வேகமாக மோதிய கார்.. நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்! உத்தராகண்ட்டில் ஷாக்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஹரிஷ் ராவத் காரில் ஹல்த்வானியில் இருந்து காஷிபூருக்கு செய்தியாளர் சந்திப்புக்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது உதம் சிங் நகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் ஹரிஷ் ராவத்துக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சு வலியால் துடித்த அவரை உள்ளூர் போலீசார் மீட்டு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்றதையடுத்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை அபாய கட்டத்தை தாண்டியதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகளும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு கைகளிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருக்கிறார். இந்த விபத்து நள்ளிரவு 12.15 மணியளவில் ஏற்பட்டதால் உடனடியாக விபத்து தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது காயமடைந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ராவத்தின் உடல் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. விபத்திலிருந்து ராவத்தை காப்பாற்றியதில் உள்ளூர் போலீசாரின் பங்கு அளப்பரியது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக காவல்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications