மேற்கு வங்காளம்: மாடுகளைத் திருட முயன்ற 4 பேரை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்
ஜால்பைகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் மாடுகளை திருட முயற்சித்த குற்றத்திற்காக நான்கு திருடர்களை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர் அப்பகுதி மக்கள்.
மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரி அருகே, பாலராம் என்ற இடத்தில் இன்று காலை 3 மணி அளவில் பண்ணையில் கட்டி வைக்கப் பட்டிருந்த மாடுகளை திருட நான்கு பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மாடுகளைத் திருடும் முயற்சியில் அவர்கள் எதிர்பாரத விதமாக கிராம மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பிடிப்பட்ட திருடர்களை கடுமையாக தாக்கி அவர்களை கட்டி வைத்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்அப்பகுதி மக்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது, பிடிபட்டவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து சாம்பலாகி விட்டதாம். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- வங்காளதேசம் எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி கால்நடைகள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஊர்மக்கள் ஆத்திரத்தில் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications