ஓசியில் மீன் தர மறுத்த 4 மீனவர்கள் சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்
பாட்னா : ஓசி மீன்கள் தர மறுத்ததால் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது முங்கிலா கிராமம். சம்பவத்தன்று அங்குள்ள அரசுக்கு சொந்தமான நீர்நிலையில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, மீனவர்கள் பிடித்த மீனை தங்களுக்கு ஒரு பகுதி பிரித்துத் தர வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளனர்.
மீனவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்த கும்பல் நள்ளிரவில் சம்பந்தப்பட்ட மீனவர்கள் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் மணீஷ் பிண்ட்(25), உதய் பிண்ட்(34), ஜனார்த்தன் பிண்ட்(19), ராம் பிரவேஷ் பிண்ட் (60) என்ற நான்கு மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். கொல்லப்பட்ட நான்கு மீனவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்.
எனவே, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவரிடம் விசாரணை நடத்திய போலீசார், ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் ஜாதிப் பிரச்சினையாக மாறியுள்ளது. காரணம் கொலையாளிகள் உள்ளூரைச் சேர்ந்த உயர் ஜாதியினர் என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications