டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் கவுதம்புரி என்ற இடத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது

கட்டிட இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications