சட்டிஸ்கரில் பரபரப்பு... பெண் மாவோயிடுகள் 4 பேர் சுட்டுக் கொலை
ராய்பூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் பெண் மாவோயிஸ்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுக்மா - தண்டேவாடா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் கூட்டாக இணைந்து நக்சலைட்டுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாலங்கிர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் கூடாரம் அமைத்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கூட்டுப்படையினர் அங்கு விரைந்தனர். அப்போது அவர்களின் கூடாரங்கள் மீது கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், 4 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பகுதியின் முக்கியத் தலைவி குண்டு அடிப்பட்டு காயங்களுடன் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டுப்படையினர் அங்கு இருந்த 303 துப்பாக்கிகளையும், 12 அதிநவீன துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். மாலங்கிர் பகுதியில் மறைந்திருந்த 10 மாவோயிடுகளில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தப்பியோடிய மேலும் 6 பேரை கூட்டுப்படையினரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications