எதுக்கு? ஆதார் எண்ணை வெளியிட்ட டிராய் இயக்குனர்.. விவரங்களை வெளியிட்டு நெத்தியடி கொடுத்த ஹேக்கர்!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், ஆதார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், ஆதார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. தேவையில்லாமல் சமூக வலைத்தளத்தில் சவால்விட்டு அவர் தனது தனிப்பட்ட விவரங்களை இழந்து இருக்கிறார்.
ஆதார் அட்டை பாதுகாப்பு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மா பெரிய ஆதார் பிரச்சனை ஒன்றில் மாட்டியுள்ளார்.
தேவையில்லாமல் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஆதார் எண்ணை வெளியிட்ட முடிந்தால் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுங்கள் என்று சவால் விடுத்தார். இதனால் எலியாட் என்ற, பிரான்ஸ் ஹேக்கர் அவர் தகவல் அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
|
வெளியிட முடியுமா?
பிஎஸ் சர்மா, ஆதார் மிகவும் பாதுகாப்பானது என்று பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இந்த நிலையில் சர்மாவின் பேட்டியை பார்த்த நபர் ஒருவர், அவருக்கு சமூக வலைதளத்தில் சவால் ஒன்று விட்டுள்ளார். உங்களுக்கு ஆதார் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வெளியிட முடியுமா என்று கேட்டுள்ளார்.
|
சவால் விடமுடியுமா
அதற்கு சர்மா, அவருடைய ஆதார் எண்ணை கொடுத்து. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்களால் என்னுடைய தகவல்களை வெளியிட முடியுமா என்று கேட்டுள்ளார்.

ஆதார் எண்
இந்த நிலையில் அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எலியாட் ஆல்டர்சன். ஏற்கனவே சில இந்திய அரசு இணையதளங்களில் இருக்கும் குறைபாடுகளை இவர் வெளிப்படையாக கொண்டு வந்தார். பிரான்ஸ் நாட்டில் முறையாக ஹேக்கிங் பயின்றவர்களில் இவரும் ஒருவர். ஆதாரின் குறைகளை தொடர்ந்து வெளிக்கொண்டு வருபவர்.
|
போன் நம்பர்
இந்த நிலையில் எலியாட், சர்மாவின் ஆதார் எண் மூலம் அவரது போன் நம்பரை கண்டுபிடித்துள்ளார். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார்.
|
வாட்ஸ் ஆப் புகைப்படம்
அவரது போன் நம்பர் மூலம் அவரது வாட்ஸ் ஆப் புகைப்படத்தையும் சேவ் செய்து வெளியிட்டு இருக்கிறார்.
|
என்ன விவரம்
அதற்கு அடுத்த டிவிட்டில, சர்மாவின் இன்னொரு போன் நம்பர், விலாசம், பிறந்த தேதி எல்லாவற்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
|
இதையும் வெளியிட்டார்
அதோடு இல்லாமல் அவரது பேன் கார்ட் எண்ணையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஆதார் அட்டையை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அதில் கொஞ்சம் கூட பாதுகாப்பு கிடையாது என்று அவர் டிவிட் செய்துள்ளார்..
|
நெத்தி அடி
எலியாட் அதோடு நிற்காமல், பிரதமர் மோடியிடம் உங்கள் ஆதார் அட்டை எண்ணை வெளிப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications