ஏப்ரல் 1க்கு பிறகு செல்லாத பணம் வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் - மத்திய அரசு முடிவு
2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அதிரடியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். டிசம்பர் 30ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலைமத்திய அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, மத்திய அரசு தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த 8ம்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைவிதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பலர் முதல் வகுப்பில் விமான டிக்கட்டுகளை பதிவு செய்துள்ளனர்,அதனையும் கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
மத்திய அரசு கொண்டுவர உள்ள புதியசட்டத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் கருப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இது அதிக அளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications