Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

26 டார்கெட்.. ஷெல்+ட்ரோன்களால் தாக்க முயன்ற பாகிஸ்தான்.. இந்தியா தந்த பதிலடியை மறக்கமாட்டாங்க

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை நம் நாட்டின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை, ஷெல் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. எந்தெந்த இடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயன்றது? அதனை எப்படி நம் நாடு தடுத்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவில் இருந்து இப்போது வரை இருநாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவில் பாகிஸ்தான் நம் நாட்டில் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதலுக்கு முயன்றது. இதனை நம் நாடு முறியடித்தது.

pakistan india Ajit Doval

அதன்பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான், ஷார்காட்டில் உள்ள ரஃபிக்கி விமான தளம் மற்றும் சாக்வால் பகுதியில் உள்ள முரித் விமான தளங்கள் மீது நம் நாடு அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் நேற்று இரவு முதல் ஜம்மு காஷ்மீர், பதான்கோட் உள்பட பிற இடங்களில் உள்ள ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லாவில் இருந்து குஜராத் மாநிலம் பூஜ் வரை மொத்தம் 26 இடங்களை ட்ரோன் குறிவைத்தது. இதில் பாகிஸ்தானுக்கு பெரும்பாலான முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. எந்தெந்த இடங்களை பாகிஸ்தான் குறிவைத்தது? எப்படியெல்லாம் தாக்குதல் முறியடிக்கப்பட்டது? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி 2வது நாளாக பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது.

* ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் நம் படை வீரர்கள் 8 முதல் 10 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.

* ஜம்மு காஷ்மீரின் சாகபூர் கேர்னி மற்றும் திக்வார் சப் செக்டாரில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

* ஜம்மு காஷ்மீரின் ஹண்த்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை ஏவி தாக்க முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரின் ராசோரி மாவட்டத்தில் பாகிஸ்தானில் ட்ரோன் பறந்த வந்த நிலையில் அதற்கு பதிலடியாக நம் படை வீரர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.

* ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லாவில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது. ட்ரோன்களும் வருவதால் இரவு முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

* வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் உள்ள சாம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது

* பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 15 ட்ரோன்கள் பறந்து வந்தன. இந்த ட்ரோன்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன. ட்ரோன் தாக்குதலை எச்சரிக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்களும் பாதுகாப்புடன் இருந்து கொண்டனர்.

* பஞ்சாப்பின் பிரோஸ்பூரில் பாகிஸ்தான் ட்ரோனை நம் நாடு சுட்டு வீழ்த்தியது. இருப்பினும் அந்த ட்ரோன் விழுந்து வீடு தீப்பிடித்ததால் 3 பேர் காயமடைந்தனர்.

* பஞ்சாப்பின் பதான்கோட்டிலும் ஷெல் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது

* இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையையொட்டி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் கிராமத்தில் பயங்கர வெடிச்சத்தம் என்பது கேட்டுள்ளது.

* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் பாகிஸ்தானின் 9 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

* ராஜஸ்தானின் பார்மரில் பாகிஸ்தானின் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

* ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் இந்திய வான்வெளி தடுப்பு சிஸ்டம் ஏராளமான ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தது.

இதில் பல இடங்களில் ராணுவ தளங்கள், விமான நிலையங்களை குறிவைத்து ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியது. ஆனால் பாகிஸ்தானின் அத்தனை சதிவேலைகளையும் நம் படைகள் வீரியமாக எதிர்த்து வானிலேயே அழித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+