ஆர்எஸ்எஸ் நிர்வாகி டூ ஒடிசா முதலமைச்சர்! யார் இந்த மோகன் மாஜி? அரசியல் பின்னணி இதுதான்.!
புவனேஸ்வர்: கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து ஒடிசா முதல்வராக பாஜகவின் மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. அதாவது பாஜக 78 இடங்களை கைப்பற்றியது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் 51 இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.

இதன்மூலம் 24 ஆண்டு பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதோடு ஒடிசாவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்வியால் முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்க இருக்கிறார். சமீபத்தில் நடந்த பாஜகவின் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், இதன் தலைவராக மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இவர் நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். 'ஆற்றல்மிக்க கட்சி காரியகர்த்தா' என்று பாஜக தலைமை மோகன் மாஜியை குறிப்பிடுகிறது. 53 வயதான மோகன், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராவார். இவருடைய அரசியல் வாழ்க்கை 90களில் தொடங்கப்பட்டுவிட்டாலும், கடந்த 2000ம் ஆண்டுதான் இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 4 முறை எம்எல்ஏவாக பதவி வகித்து வந்திருக்கிறார். எம்எல்எவாக இருந்த காலத்தில் திறமையான அரசியல்வாதி என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு பதவிகள் தேடி வர தொடங்கின. குறிப்பாக கடந்த 2005 முதல் 2009 வரை பிஜு ஜனதா தளம் (பிஜேடி) பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியில் இவருக்கு துணை தலைமைக் கொறடா பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவர் பள்ளி காலத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இளமை பருவத்தில் ஆர்எஸ்எஸ்-ன் பல முக்கிய துணை அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். இந்துத்துவ கோட்பாட்டை தீவிரமாகவும், அதேநேரம் சாமார்த்தியமாகவும் ஒடிசா மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இவர் ஆற்றிய பணிகள் ஏராளமானவை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்த முறை இவருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications