தமிழக காங். தலைவர் பதவி... ராகுல் எதிர்ப்பை மீறி சோனியாவை சந்திக்க வாசன் மும்முரம்!!
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக சோனியாவை சந்திப்பதற்காக டெல்லியில் ஜி.கே.வாசன் முகாமிட்டிருக்கிறார். ஆனால் தம்மை முழுமையாகவே ராகுல் நிராகரிக்கும் நிலையில் சோனியாவை எப்படியாவது சந்தித்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம் வாசன்.
ராஜ்யசபா எம்.பி.யாக மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அப்படி ஒரு வெறுப்பு.. தனது எம்.பி. பதவி காலியான போது வேறு மாநிலத்தில் இருந்து தம்மை தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார் வாசன்..
ஆனால் ராகுலோ, லோக்சபா தேர்தலில் நின்று வெல்லுங்கள் என்று கடுப்படித்தார். இதில் வெறுத்துப் போன ஜி.கே.வாசன் தமது ஆதரவாளர்கள் மூலம் அவ்வப்போது தனிக் கட்சி முழக்கங்களை முன்வைத்து காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டும் அரசியலை செய்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் போட்டியில்லை
பின்னர் லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடப் போவதே இல்லை என்று பகிரங்கமாகவும் அறிவித்தார் வாசன். தேர்தலில் காங்கிரஸ் மண்ணை கவ்வியது. அதைத் தொடர்ந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளரான ஞானதேசிகனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தூக்குவதற்கு எதிர்க்கோஷ்டியான ப.சிதம்பரம் அணி மும்முரம் காட்டியது.

தமிழக காங். தலைவர் யார்?
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு ஆலோசித்து 4 பேர் கொண்ட ஒரு பட்டியலை மேலிடத்தில் கொடுத்துள்ளது.

அந்த 4 பேர் இவர்கள்தான்..
அந்தப் பட்டியலில் வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஞானதேசிகன் பதவிக்கு வேட்டு ரெடியாகிவிட்டது என்பதை உறுதி செய்து கொண்டார் ஜி.கே.வாசன்.

டென்சனில் வாசன்
இதனால் தமது ஆதரவாளர் ஞானதேசிகனை மாற்றக் கூடாது அல்லது என்னை தலைவராக்குங்கள் என்ற கோரிக்கையுடன் சோனியாவை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் ஜி.கே.வாசன்.

4 பேர் மீதும் புகார்
ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் தற்போது தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பேர் மீது புகார் பட்டியலை கையில் வைத்துக் கொண்டுதான் சோனியாவை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

வசந்தகுமார்
அதாவது, வசந்தகுமாரை கட்சித் தலைவராக்கினால் தனது வர்த்தக நிறுவனங்கள் நலன் கருதி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மாட்டார்

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸை தலைவராக்கினால் திமுகவுடன் மட்டுமே கூட்டு சேர முயற்சிப்பார்.. இதர கட்சிகள் பற்றி யோசிக்கவே மாட்டார்

சுதர்சன நாச்சியப்பன்
சுதர்சன நாச்சியப்பனுக்கு அகில இந்திய காங்கிரஸில் முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதால் தலைவர் பதவி எதற்கு?

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் அண்மையில் காங்கிரஸுக்கு வந்தவர்..அவருக்கு பதவி கொடுத்தால் பிரளயம் வெடிக்கும்
இப்படித்தான் சோனியாவிடம் புலம்புவதற்கு தயாராக இருக்கிறாராம் ஜி.கே.வாசன்.

கடுப்பில் ராகுல் காந்தி
ஆனால் ஜி.கே.வாசன் பெயரைக் கேட்டாலே கடுப்பாகிறார் ராகுல் காந்தி. அதனால் சோனியாவை சந்திக்கவே விட கூடாது என்பதில் ராகுல் கண்கொத்திப் பாம்பாக இருக்கிறாராம்.

வெறுப்பில் சோனியா
அதேபோல் தமிழக காங்கிரஸார் எவர் பெயரைக் கேட்டாலுமே அனுமதி இல்லை என்கிறாராம் சோனியா.

போராடும் ஜி.கே.வாசன்
இப்படி ராகுல் எதிர்ப்பை மீறி சோனியாவை சந்தித்து தலைவர் பதவி குறித்து எப்படியும் பேசிவிடுவேன் என்று நம்பிக்கையோடு டெல்லியில் காத்துக் கிடக்கிறாராம் ஜி.கே.வாசன்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications