லலித் மோடி விவகாரத்தில் சிக்கிய வசுந்தரா ராஜேவுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு- நிதின் கட்காரி
ஜெய்பூர்: தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜேவுக்கு மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் முழு ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரராஜே உதவிய விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருவரும் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளன. இதனால் மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ததாகக் கூறும் சுஷ்மா ஸ்வராஜுக்கு, மத்திய அரசு தனது ஆதரவை தெரிவித்தது. ஆனால் வசுந்தரராஜேவை பாரதிய ஜனதாவும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவுடனான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதை அவர் புறக்கணித்தார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசுந்தரராஜே சிந்தியாவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசு முழுஆதரவு அளிக்கிறது. வசுந்தரா ராஜேவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை... அவரிடம் எந்தஒரு வகையிலும் தவறு இல்லை.... இதுபோன்ற அரசியல் நடத்துவது சரியானது கிடையாது என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications