எஸ்பிஐ பெயரில் போலி வங்கி.. பல லட்சம் ரூபாய் விபூதி அடித்த கும்பல்! சினிமாவை மிஞ்சிய சம்பவம்
ராய்பூர்: போலியாக எஸ்பிஐ வங்கியை ஒன்று உருவாக்கி அந்த வங்கிக்கு புதிதாக ஆட்களை வேலைக்கு சேர்த்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அச்சு அசலாக எஸ்பிஐ வங்கி கிளை போலவே கவுண்ட்டர்கள், அறைகள் எல்லாம் அமைத்து செட் அப் செய்து இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த மோசடி சம்பவம் எப்படி நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
வித விதமான மோசடிகள் நாளுக்கும் நாள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய செய்பவர்களிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதை கேள்வி பட்டு இருப்போம். ஆனால், போலியாக எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றை ஆரம்பித்து.. அங்கு பணியாற்ற ஊழியர்களை நியமித்து பல லட்சக்கணக்கான பணத்தை அபேஸ் செய்து இருக்கிறது ஒரு மோசடி கும்பல்.

புதிதாக முளைத்த வங்கி: படத்தில் கூட இப்படி எல்லாம் நடக்காதே என யோசிக்கும் அளவுக்கு வினோத முறையில் நடைபெற்ற இந்த மோசடி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.. சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சஹப்போரா. இந்த பகுதியில் திடீரென புதிதாக எஸ்பிஐ வங்கி கிளை ஒன்று முளைத்தது.
10 நாட்கள் இயங்கிய வங்கி: யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், எஸ்பிஐ வங்கி கிளை போலவே.. கவுண்டர்கள் அமைத்து அச்சு அசலாக செட் அப் செய்து இருக்கிறார்கள் இந்த மோசடி கும்பல். 10 நாட்களாக படு ஜோராக இந்த போலி வங்கி இயங்கி வந்து கொண்டு இருக்கிறது. அப்போது, அஜய் குமார் அகர்வால் என்ற உள்ளூர் நிர்வாகி ஒருவர் எஸ்பிஐ வங்கியின் சேவை மையம் தொடங்குவதற்கு விண்ணப்பித்து இருந்தார்.

திடுக்கிடும் தகவல்: அவருக்கு சப்பரோவில் ஒரே நாள் இரவில் எஸ்பிஐ வங்கி கிளை அமைக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தப்ரா நகரின் எஸ்பிஐ மேலாளரிடம் இது பற்றி தகவல் கொடுத்தார். அப்போதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, எஸ்பிஐ வங்கி தரப்பில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ரூ.7 ஆயிரத்திற்கு கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த கும்பல் போலி வங்கி ஆரம்பித்ததோடு, 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என ஆட்சேர்ப்பு நடத்தி, அப்பாவி இளைஞர்களிடம் பல லட்சம் பணம் பெற்றுக்க்கொண்டு போலி பணி நியமன ஆணையும் கொடுத்து ஏமாற்றியிருக்கிறது.
சினிமாவை மிஞ்சும் சம்பவம்: இந்த மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள். எஸ்பிஐ வங்கியின் பெயரில் தனியாக கிளை ஒன்றை ஆரம்பித்து மோசடி நடைபெற்ற சம்பவம் சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்க்கு அமைந்துள்ளது.

திடுக்கிடும் தகவல்: அவருக்கு சப்பரோவில் ஒரே நாள் இரவில் எஸ்பிஐ வங்கி கிளை அமைக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தப்ரா நகரின் எஸ்பிஐ மேலாளரிடம் இது பற்றி தகவல் கொடுத்தார். அப்போதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, எஸ்பிஐ வங்கி தரப்பில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ரூ.7 ஆயிரத்திற்கு கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த கும்பல் போலி வங்கி ஆரம்பித்ததோடு, 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என ஆட்சேர்ப்பு நடத்தி, அப்பாவி இளைஞர்களிடம் பல லட்சம் பணம் பெற்றுக்க்கொண்டு போலி பணி நியமன ஆணையும் கொடுத்து ஏமாற்றியிருக்கிறது.
சினிமாவை மிஞ்சும் சம்பவம்: இந்த மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள். எஸ்பிஐ வங்கியின் பெயரில் தனியாக கிளை ஒன்றை ஆரம்பித்து மோசடி நடைபெற்ற சம்பவம் சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு அமைந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications