புது தாலியின் ஈரம்.. மனைவியுடன் 6 மணி நேரம்.. ஜெயிலுக்குள் துருவ் சந்தோஷம்.. அம்மாவுக்கு நிம்மதி!
ஜெயிலுக்குள் கொலையாளிக்கு நடந்த திருமணம் நடந்துள்ளது
சண்டிகர்: புது தாலியின் ஈரம்.. கட்டின மனைவியுடன் வெறும் 6 மணி நேரம்தான் இருக்க முடிந்தது.. இப்படி ஒரு நிலைமை ஜெயிலில் உள்ள கொலை குற்றவாளி துருவ்-க்கு வந்திருக்கிறது!
பஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்திப் சிங். இவருக்கு துருவ் என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஒரு பஞ்சாயத்து தலைவரை இவர் கொலை செய்துவிட்டார்.
இந்த கொலை உறுதி செய்யப்பட்டு, இப்போது துருவ்-க்கு ஆயுள் தண்டனை கிடைத்தள்ளது. நபா ஜெயிலில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஜெயிலுக்கு போய் 10 வருஷங்கள் ஆகின்றன.. இப்போது துருவ்-க்கு 35 வயசாகிறது.

மணப்பெண்
மகனுக்கு ஆயுள் தண்டனை என்று தெரிந்தும், பெற்ற மனசு கேட்கவில்லை.. ஒரு கல்யாணத்தை பண்ணிவைக்க முடிவு செய்தனர். இதற்காக பெண்ணையும் தேடினர்.. கடைசியில் கன்னா என்ற பகுதியை சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை பேசி முடித்தனர்.

துருவ்
இரு வீட்டுக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம்தான். முக்கியமாக கல்யாண பெண்ணுக்கு சம்மதம்.. இந்தவிஷயத்தை துருவ்-க்கும் குடும்பத்தினர் தெரிவித்தனர். தனக்கு கல்யாணம் நடக்க இருப்பதால், பரோல் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் துருவ் மனு தாக்கல் செய்தார். ஆனால் போலீசார் இதற்கு விடவே இல்லை. பரோல் சாக்கை வைத்து தப்பித்துவிடுவார், பரோல் தரக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு சொன்னார்கள்.

மீண்டும் பரோல்
இதனை ஏற்ற கோர்ட்டும் துருவ்-க்கு பரோல் வழங்க மறுத்துவிட்டது. அதனால், மனம் நொந்த மணப்பெண், போன 2016-ம் ஆண்டு துருவின் போட்டோவை வைத்து, மானசீகமாக கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, திரும்பவும் பரோல் கேட்டு கோர்ட்டுக்கு போனார் துருவ்.

6 மணி நேரம்
இதை பரிசீலரித்த கோர்ட்டும், வேண்டுமானால் சிறை வளாகத்திலேயே கல்யாணத்தை வைத்து கொள்ளுங்கள், 6 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது, அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று ஜெயிலுக்குள் துருவ்-பவன் தீப் கவுருக்கு திருமணம் நடந்தது. கல்யாண பெண் ரோஸ் கலரில் ஆடை உடுத்தியிருந்தார்.. ஜெயிலுக்குள் கல்யாணம் என்பதால் முக்கியமான சொந்தக்காரர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

வாடிய முகம்
அவர்களுடன் சேர்ந்து இந்த மணமக்களை அங்கிருந்த போலீசாரும் வாழ்த்தினர். வெறும் 6 மணி நேரம்தான் துருவ் கட்டின மனைவியுடன் கூட இருந்தார். அதற்கு பிறகு, சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர்... ஏக்கத்துடனும், வாடிய முகத்துடனும் திரும்பவும் சிறைக்குள் சென்றுவிட்டார் மாப்பிள்ளை துருவ்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications