வியப்பு.. சட்டென மேடையில் ஏறி ஆடிய கங்குலி மனைவி.. சிறப்பு.. பாராட்டிய அமித் ஷா.. என்ன நடந்தது?
கொல்கத்தா: நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் பிசிசிஐ கங்குலியின் மனைவி நடனம் ஆடிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கங்குலி. துவண்டு கிடந்த இந்திய அணியை மீட்டு, பலமான அணியை கட்டமைத்த சிறப்பு கங்குலியை சேரும்
கேப்டனாக இவர் சறுக்கிய சில போட்டிகள், இவர் எடுத்த சில முடிவுகள் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருந்தாலும் இந்திய அணியின் திசையை மாற்றிய முக்கியமான கேப்டன்களில் கங்குலியும் ஒருவர்.

கங்குலி
இந்த நிலையில் தற்போது கங்குலி பிசிசிஐ தலைவராக இருக்கிறார். பிசிசிஐ தலைவராக ஆன பின் கங்குலி அணிக்குள் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் கங்குலி அரசியலுக்குள் வர போவதாக பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த வருடம் கூட மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது பாஜக சார்பாக கங்குலி முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

பிசிசிஐ
ஆனால் அப்போது அவருக்கு உடல்நிலை பிரச்சனை வந்ததால் அரசியலில் நுழைய முடியவில்லை. பிசிசிஐ அமைப்பில் அமித் ஷாவின் மகன் ஜே ஷா செயலாளராக இருக்கிறார். இதனால் ஜே ஷாவுடன் கங்குலி நெருக்கமாக இருக்கிறார். இதன் வழியாக கங்குலியை அமித் ஷா வளைத்து, பாஜகவிற்கு இழுக்க போவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் மேற்கு வங்கம் சென்று இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கங்குலி வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார்.

கங்குலி
கங்குலி வீட்டிற்கு சென்ற அமித் ஷாவிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் கங்குலி பாஜகவில் இணைய போகிறாரோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் கங்குலி மனைவி நடனம் ஆடிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. துர்கா பூஜை, இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இதை மையப்படுத்தி யுனெஸ்கோ மூலம் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட விழாவில் அமித் ஷா கலந்து கொண்டார்.

டோனா
இந்த நிகழ்வில் கங்குலி மனைவி டோனா கங்குலி பாரம்பரிய நடனம் ஒன்றை ஆடினார். குழுவாக பல்வேறு நடனக் கலைஞர்களுடன் இணைந்து டோனா நடனம் ஆடினார். திடீரென மேடையில் ஏறி டோனா நடனம் ஆடியதை அங்கிருந்த பலரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்ப்பார்க்கவில்லை.

கரகோஷம்
டோனா நடனம் ஆடியதை பார்த்து அங்கிருந்த பலர் கரகோஷம் எழுப்பினர். ஆனால் டோனா பாரம்பரிய நடன முறையை பயின்ற நடனக் கலைஞர் ஆவார். பல வருடமாக இவர் பல்வேறு மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறார். இந்த நிகழ்விற்கு பின்தான் அமித் ஷா கங்குலி வீட்டில் உணவு அருந்தினார். டோனாவின் கலை நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும் அமித் ஷா அவரை பாராட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications