சுடிதார்.. துப்பட்டா.. நெற்றியில் குங்குமம்.. கவுதம் கம்பீரின் பெண் தோற்றத்திற்கு காரணம் தெரியுமா?
சுடிதார் துப்பட்டா அணிந்து குங்குமம் வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர் கம்பீரின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: சுடிதார் துப்பட்டா அணிந்து குங்குமம் வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர் கம்பீரின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
இந்திய அணியில் சில மாதங்கள் முன்பு வரை ஓப்பனர் மற்றும் ஒன் டவுன் இடத்தில் ஆடி வந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இப்போது இவருக்கு அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.
இவர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இவரது வித்தியாசமான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இது டெல்லியில் நடந்த ஹிஜ்ரா ஹப்பா விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

என்ன விழா அது
தமிழகத்தில் கூவாகத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்காக விழா நடப்பது வழக்கும். எல்லா வருடமும் இந்த விழா மிகவும் சிறப்பாக நடக்கும். அதேபோல்தான் டெல்லியில் ஹிஜ்ரா ஹப்பா விழாவிலும் திருநங்கைகள், திருநம்பிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த விழா வட இந்தியாவில் மிகவும் பிரபலம்.

பெரிய வைரல்
இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் கம்பீர் அழைக்கப்பட்டு இருந்தார். திருநங்கைகள், திருநம்பிகள் அழைப்பை ஏற்று அவர் நேற்று இந்த விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் துப்பட்டா அணிந்து, சுடிதார் போட்டு, பின் நெற்றியில் குங்குமமும் வைத்து காட்சி அளித்தார். அந்த விழாவில் திருநங்கைகள், திருநம்பிகளின் வாழ்க்கை குறித்து பேசினார்.
|
வரவேற்பு
அவரது இந்த தோற்றம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. எல்லோரும் இவரை பாராட்டி வருகிறார்கள். இவர் மிகவும் சிறந்த மனிதர் நல்லவர் என்று பாராட்டி வருகிறார்கள்.
|
ஏற்கனவே இப்படி
இவர் இதற்கு முன்பே இப்படி செய்துள்ளார். கம்பீர் சென்ற ராக்கி பண்டிகையில், அபினா, சிம்ரன் என்ற இரண்டு திருநங்கைகளுக்கு ராக்கி கட்டிவிட்டார். அதேபோல் தனது ரசிகர்களும் இப்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுவும் இணையம் முழுக்க வைரலானது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications