இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும்.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும்.

இப்படி தொடர்ந்து ஜிடிபி சரிந்து வருவது எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அரசு இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட் அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும்.
மத்திய பட்ஜெட் தாக்கலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் - கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது.
இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை இந்த 2020 நிதி ஆண்டியில் 3.8% ஆக இருக்கும். அடுத்த 2021ம் ஆண்டு நிதி ஆண்டில் 3.5% ஆக இருக்கும், என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், முன்னதாக 2020 மொத்த ஜிடிபி 6.1% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அது மேலும் குறையும் என்று ஆர்பிஐ கூறியது. அதன்படி 2020ல் மொத்த ஜிடிபி 5% ஆக குறையும் என்று ஆர்பிஐ சார்பாக கணிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications