தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சியை வழி நடத்த 2,000 தீவிர தொண்டர்கள்- ஆர்.எஸ்.எஸ். திட்டம்!!
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் நிலை உருவானால் ஹிந்துத்துவா கொள்கையில் இருந்து விலகாமல் இருக்க 2 ஆயிரம் தொண்டர்களை அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்த அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் மத்தியில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. அ[ப்படி மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் ஹிந்துத்துவா கொள்கைகளில் அது உறுதியாக தொடர்ந்து செயல்பட வைக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

இதன் முதல் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ரத்னாகர் பாண்டே, சந்திரசேகர் பாண்டே, பவானிசிங் ஆகியோர் பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரத்னாகர் பாண்டே லக்னோவிலும் சந்திரசேகர் பாண்டேவை வாரணாசியிலும் பவானிசிங்கை ரேபரேலி தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கின்றனர். இதே போல இதர மாநிலங்களிலும் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் உட்கார வைக்கப்பட இருக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, இப்படி செய்வது வழக்கமான நடவடிககிதான்.. தேர்தலுக்குப் பிறகு இதர மாநிலங்களில் இந்த நியமனம் தீவிரமாகும் என்றார்.
1988-89ஆம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதே உத்தியைக் கையாண்டது. அப்போதுதான் நரேந்திர மோடி, கோவிந்தாச்சாரியா, இல. கணேசன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் இருந்து பாஜகவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications