For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளூர் உளுந்து வடை வெளிநாட்டில் விலைபோகுமா?? - ஜெர்மனி அதி்பரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜெர்மனி அதிபர் ஜோச்சிம் காக் செவ்வாய்க்கிழமை இந்தியா வருகிறார். அவரது இந்தியப் பயணத்தின் முக்கிய அம்சமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரை சந்திக்கவுள்ளார்.

இந்தியாவும்,ஜெர்மனியும் கடந்த 2000மாவது ஆண்டிலிருந்து நல்லுறவை பேணி வருகின்றன.இந்நிலையில் இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், காக் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.

Arvind Kejriwal

முன்னதாக கெஜ்ரிவால் சந்திப்பு தொடர்பாக ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர், கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசி இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட சில முக்கியப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு கொண்டவர் கெஜ்ரிவால். இருப்பினும் வெளிநாட்டு முக்கியப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளை அவர் தவிர்த்ததில்லை. கடந்த வாரம் பாகிஸ்தான் ஊடக பிரதிநிதிகள் குழு டெல்லி வந்தபோது அவரை முன்கூட்டியெ தெரிவிக்காமல், சந்திக்க விருப்பம் தெரிவித்தது. அவரும் சந்தித்தார்.

இந்தியா, ஜெர்மனி இரண்டு நாடுகளுமே ஜி4ல் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவில் நேரடிய அந்நிய முதலீடுகளைச் செய்யும் நாடுகளில் 8வது வரிசையில் ஜெர்மனி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின் மிகப் பெரிய

2000-2012 வரையிலான காலகட்டத்தில் ஜெர்மனி, இந்தியாவில் கிட்டத்தட்ட 32 ஆயிரத்து 637 ஆயிரத்து 80 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது.

இந்நிலையில் ஊழலை எதிர்க்கும் டெல்லி முதல்வருடனான ஜெர்மனி அதிபரின் சந்திப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கான வழியையும்,மக்களின் வேலைவாய்ப்பு பற்றியும் கெஜ்ரிவால், ஜெர்மனி அதிபருடன் ஆலோசிப்பாரா என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி..

English summary
India and Germany, strategic partners since 2000, will have an opportunity to further cement ties when President Joachim Gauck arrives here Tuesday for a 6-day state visit. One of the highlights of the visit though will be the president's meeting with Delhi chief minister Arvind Kejriwal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X