Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல் ரிசல்ட்டை.. நொடிக்கு நொடி துல்லியமாக அறிய டெய்லிஹண்ட்டுடன் இணைந்திருங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை, தேர்தல் தொடர்பான கட்டுரைகளை துல்லியமாகவும், வேகமாகவும் Dailyhuntல் உடனுக்குடன் நீங்கள் பெற முடியும். ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியாகும் நிலையில் தேர்தல் தொடர்பான ஆழமான செய்திகளை பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள்.

நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும்.

Get Lok Sabha 2024 Election Results on your fingertip with DailyHunt

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடந்துள்ளது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி தலைமையிலான "மோடி கேரண்டி" கோஷத்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.

20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 70%க்கு சமம். ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களும், 12 சட்டப் பேரவைகளில் உள்ள 25 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்று உள்ளன.

2024 தேர்தலுக்கு, 968 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், இது 2019 தேர்தலை விட சுமார் 150 மில்லியன் வாக்காளர்கள் இந்த முறை அதிகமாகும். அருணாச்சலப் பிரதேசத்தில், அனைத்து குடியிருப்புகளிலிருந்தும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் சட்டத்தின் காரணமாக, மாலோகம் கிராமத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட விநோதங்கள் கூட இந்த தேர்தல் காலத்தில் நடந்தது.

அதேபோல் குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதிக்குள் ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு, ஒரு தனி வாக்காளர் வந்து வாக்களித்த அதிசயங்களும் நடந்தன. கேரளாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திலும், குஜராத்தில் உள்ள கப்பல் கொள்கலனிலும், மணிப்பூரில் இனக்கலவரத்தின் போது இடம்பெயர்ந்த சுமார் 59,000 பேர் வசிக்கும் 320 நிவாரண முகாம்களிலும் கூட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல்கள் இந்த முறை நடந்தன.

இதுவரை நடந்த தேர்தல்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகளை துல்லியமாகவும் சரியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை Dailyhunt செய்தி தளம் செய்து வருகிறது. முடிவுகளை பகுப்பாய்வது, ஒன்றுக்கு இரண்டு முறை அதனை சரிபார்ப்பது, சரியான நேரத்தில் கொடுப்பது என அனைத்திற்கும் தனித்தனி செய்தியாளர்களை Dailyhunt கொண்டிருக்கிறது.

மாநில வாரியாக, தொகுதி வாரியான மாற்றங்கள், முந்தைய வரலாற்று நம்பர்கள், டேட்டாக்கள், சுவாரசிய பின்னணி தகவல்கள், தேர்தல் முடிவுகள் குறித்து வரும் அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் மாற்றுக் கருத்துக்கள் ஆகியவற்றையும் Dailyhunt மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்க்கிறது. எனவே இந்த தேர்தல் முடிவுகளை காண Dailyhunt உடன் தொடர்பில் இருங்கள்.

எக்சிட் போல்: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளன. ஆனால் 2019ல் பெற்றதை விட குறைவான இடங்களை வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியா செய்திகள்- டி-டைனமிக்ஸ் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 371 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 125 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 47 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

Jan Ki Baat கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 362-392 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 141 - 161 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 10-20 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் 18 எக்ஸிட் போல் : தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் என்று CNN நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது. பாஜக+ 1-3 சீட்களிலும், அதிமுக+ கூட்டணி 0-2 சீட்களிலும் வெல்லும்-நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது.

என்டிடிவி கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 365 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 142 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 36 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

லோக்போல்: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 325-335 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 155-165 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள் 48-55 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வேஎக்சிட் போல் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி-பி மார்க் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 154 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 30 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+