பெங்களூர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம் பெண் மீது பாலியல் அத்துமீறல்?
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தை போலவே இந்த ஆண்டும், பெண் மீது பாலியல் சீண்டல் அரங்கேறியதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
பெங்களூரின் எம்ஜிரோடு, பிரிகேட் ரோடு பகுதிகள், சர்ச் தெரு போன்றவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றவை. ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் 31ம் தேதி நள்ளிரவில் கூடி ஆட்டம், பாட்டம் போட்டு மகிழ்வர்.
ஆண்களும், பல நவநாகரீக பெண்களும் கூட மது போதையில் தள்ளாடியபடி அங்கே குவிவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இவ்வாண்டு சுமார் 60,000 பேர் கொணண்டாட வந்திருந்தனர்.

கிளுகிளு கொண்டாட்டம்
காதலர்களாக வருவோர், புத்தாண்டு பிறந்ததும், உதட்டு முத்தம் கொடுத்து புத்தாண்டை வரவேற்பார்கள். இதை காணவே ஒரு கூட்டம் அங்கு குவிவதும் உண்டு. அரை குறை ஆடைகள், போதை மயக்கம், முத்த சத்தம்.. என எம்ஜிரோடு மற்றும் பிரிகேடு ரோடு பகுதியே, பெரும் கிளுகிளுப்புடன் புத்தாண்டை வரவேற்பது வாடிக்கை.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த பகுதியில், கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கூட்டமாக பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிசிடிவிகளில் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து இந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

15,000 போலீசார்
பெங்களூர் நகரில் நேற்று இரவு மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எம்ஜிரோடு மற்றும் பிரிகேட் சாலை பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் அதிகம் பொருத்தப்பட்டன. இந்த நிலையிலும், பாலியல் அத்துமீறல் புகார் எழுந்துள்ளது.

அத்துமீறலா?
பெண் ஒருவர் தன்னை சீண்டுவதாக கூறியபடி அழுதுகொண்டே ஓடியதாக நேரில் பார்த்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளதாக சில மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை சிசிடிவி காமிரா எதிலும் அதுபோன்ற காட்சிகள் பதிவாகவில்லை. எந்த பெண்ணும் தான், பாதிக்கப்பட்டதாக, புகார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications