பறக்கும் விமானத்தில் பாலியல் சேட்டை... வைரலாக பரவும் தொழிலதிபர் வீடியோ!
டெல்லி: மும்பை-புவனேஸ்வர் நடுவே பறக்கும் விமானத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபரை வீடியோ எடுத்த பயணி ஒருவர் அதை யூடியூப்பில் வெளியிட்டார். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவியுள்ளது.
கடந்த ஜனவரி 27ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மும்பையில் இருந்து புவனேஷ்வருக்கு இன்டிகோ விமானத்தில் சென்றார். அப்போது பின் இருக்கையில் 60 வயதான தொழிலதிபர் ஒருவரும் பயணித்துள்ளார். இவர் ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பயணத்தின்போது அந்த தொழில்அதிபர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் போலீசில், புகார் தெரிவித்தார். இருக்கைகளின் இடைவெளி வழியே என்னை தொடுவதற்கு முயற்சிகள் செய்தார். சிலநேரங்களில் அவருடைய செய்கைகள் அத்துமீறியதால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விமானநிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி போலீசார் தொழில்அதிபரை கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம், பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தொழில்அதிபருக்கு நோட்டீஸ் வழங்கிய பின்னர் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதி அளித்துள்ளனர். அந்த தொழிலதிபர் கூறுகையில், தவறான நோக்கத்தில் தொடவில்லை என்றார்.
விமானத்திற்குள் நடந்த சம்பவங்களை தனது செல்போன் கேமராவால் சக பயணி படம் பிடித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த தொழிலதிபர் குறித்த காட்சிகள் சமூக தளங்களில் வைரலாகியுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications