"லிவ் இன்" ஆக வாழ்ந்து விட்டு கைவிட்டதாக பேஸ்புக் நண்பர் மீது இளம் பெண் புகார்
முசாபர்நகர்: உ.பி. மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி லிவ் இன் உறவு மூலம் சேர்ந்து வாழ்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் மீது இளம் பெண் பரபரப்புப் புகார்களைக் கூறியுள்ளார்.
முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் நொய்டாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இதில் காதல் மலரவே இருவரும் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லிவ் இன் உறவில் புகுந்தனர்.
இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது தனது காதலர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அப்பெண். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நானும் அவரும் இணைந்து வாழ ஆரம்பித்தோம். என்னை அவர் திருமணம் செய்யவில்லை. ஆனால் அவருடன் நான் மனைவி போல வாழ்ந்து வந்தேன்.
என்னை பாலியல் ரீதியாக முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். என்னைத் திருமணம் செய்யுமாறு அவரிடம் கேட்டபோது, ரூ. 20 லட்சம் வரதட்சணையாக கொடுத்தால்தான் திருமணம் செய்வேன் என்று கூறி விட்டார். இப்போது என்னை மிரட்டவும் செய்கிறார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி. ஷர்வன் குமார் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications