'கிஃப்ட்' தராத கடுப்பில் காதலனின் நிர்வாண படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆன்லைன் காதலனின் நிர்வாண புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில் அதிபர் தேவேஷ் சர்மா. அவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தனது 23 வயது சகாதரிக்கு சர்மாவின் நிறுவனத்தில் வேலை அளிக்குமாறு கேட்க அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர்கள் சந்திக்காமலேயே நண்பர்கள் ஆகியுள்ளனர்.
அந்த பெண் தன்னை அழைத்துக் கொண்டு பார்ட்டிகளுக்கு செல்லுமாறு சர்மாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள குட்டை பாவாடையும், ரூ.4,500 மதிப்புள்ள கைப்பையும் வாங்கித் தருமாறு அந்த பெண் சர்மாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவற்றை வாங்கிக் கொடுக்க சர்மா மறுத்துவிட்டார். மேலும் பேசியபடி லக்னோ அருகில் உள்ள ஆலம்பாக்கில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்கும் வர சர்மா மறுத்துவிட்டார்.
மேலும் அந்த பெண் தனக்கு ரூ.2 லட்சம் அளிக்குமாறு சர்மாவுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அவர் மறுக்கவே தனக்கு ரூ.20 ஆயிரம் அளிக்குமாறு கூறி தனது வங்கி கணக்கு எண்ணையும் அளித்துள்ளார். அதற்கு சர்மா மறுக்க அந்த பெண் அவரை மிரட்டியுள்ளார்.
சர்மா பணமோ, பரிசுப் பொருட்களோ தர மறுத்ததால் கடுப்பான அந்த பெண் சர்மா பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி அவரின் போலி நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் ஆபாசபட இணையதளங்களில் அந்த போலி ஃபேஸ்புக் கணக்கின் இணைப்பை அளித்ததுடன், சர்மாவின் செல்போன் எண்ணை வெளியிட்டு அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிந்ததும் சர்மா அந்த பெண் மீது போலீசில் புகார் கொடுத்தார். சர்மாவும் அந்த பெண்ணும் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் மட்டும் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துள்ளனர். அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண் மானக்நகரைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பெண் செல்போன் மூலம் சர்மாவிடம் மன்னிப்பு கேட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications